வருடத்திற்கு 10 லட்சம் இளைஞர்கள் – நான் முதல்வன் திட்ட இலக்கு

வருடத்திற்கு 10 லட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக…

வருடத்திற்கு 10 லட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது பேசிய அவர், கல்லூரி மாணவர்களை தொழில் நிறுவனங்களின் தேவைக்கு தயார் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெரும் பலமாக உள்ள உற்பத்தித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்துகிறோம்.

தகவல்தொழில்நுட்பத்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு தான் அதிக வேலைவாய்ப்புக்கு கொடுக்க வேண்டும் என நிறுவனத்தினர் நினைக்கின்றனர். நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களை விட, கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் வேலையில் நீண்ட காலம் இருப்பதாக ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கச் செய்வதே நான் முதல்வன் திட்டம். ஒரு வருடத்திற்கு 10 இலட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதே நான் முதல்வன் திட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநின்ற மாணவர்களும் திறன் வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்க திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமே நோக்கமல்ல, தொழில் முனைவோராக்குவதும் நோக்கம். எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.