அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தியான ஒரு கோடியாவது காரை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஹூண்டாய் நிறுவனத்தில் பேட்டரி கார் மூலம் அந்நிறுவனத்தின் உற்பத்தி…

 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தியான ஒரு கோடியாவது காரை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஹூண்டாய் நிறுவனத்தில் பேட்டரி கார் மூலம் அந்நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.  ஹூண்டாயில் உற்பத்தியான ஒருகோடியாவது காரில் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கையெழுத்திட்டார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர்,  “ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் அதிகமான உற்பத்தியை ஹூண்டாய் நிறுவனம் செய்து வருகிறது அதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். தெற்காசியாவிலேயே உற்பத்தி தொடங்க முதன்மை மாநிலமாக தமிழகம்  இருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது”என்று தெரிவித்தார். 

தொடர்ந்து, “தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.