தங்கலான் படத்தின் டீசர் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான். ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது. படத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர் விக்ரம் குணமாகிய நிலையில் படப்படிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் திட்டமிட்ட தொகையைத் தாண்டி ரூ.100 கோடிக்கும் மேல் செலவானதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
தங்கலான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும், இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 1-ம் தேதி வெளியகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Every glint of gold has a story to tell✨
Revealing the #ThangalaanTeaser in 2 days #ThangalaanTeaserFromNov1 #ThangalaanFromJan26#Thangalaan @Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @DanCaltagirone @gvprakash… pic.twitter.com/p1HBZKbTto
— Studio Green (@StudioGreen2) October 30, 2023
இந்நிலையில் டீசர் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதாக அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.







