TANCET மற்றும் CEETA தேர்வு முடிகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியாகும்: அண்ணா பல்கலைக்கழகம்

TANCET மற்றும் CEETA தேர்வு முடிகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. MBA, MCA உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு TANCET நுழைவுத்தேர்வும், எம்.இ, எம்.ஆர்க், எம்.டெக், உள்ளிட்ட…

TANCET மற்றும் CEETA தேர்வு முடிகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

MBA, MCA உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு TANCET நுழைவுத்தேர்வும், எம்.இ, எம்.ஆர்க், எம்.டெக், உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு CEETA நுழைவுத்தேர்வும் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்தார். அப்போது, TANCET தேர்வை 22 ஆயிரத்து 753 பேர் எழுதியதாகவும் 5 முதல் 6 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை என்றும் தெரிவித்தார்.

மொத்தம் பதிவு செய்தவர்களில் 5 முதல் 6 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை, இது கடந்த ஆண்டை விட குறைவு தான் என்று கூறிய ஸ்ரீதரன், தமிழ்நாட்டில் 17 இடங்களில் நடக்கிறது. இதில் CEETA தேர்வை 4 ஆயிரத்து 961 பேர் எழுதியதாகவும், அதில் சென்னையில் மட்டும் 1861 பேர் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தார்.

மேலும் 25 வேறுபட்ட பாடங்களில் இந்த தேர்வு மாணவர்களின் தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்த முறை கேள்வித்தாள் மாணவர்கள் கொண்டு செல்லலாம். விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட பின் அதனை சரி பார்த்துக் கொள்ளலாம். ஏப்ரல் 15 ஆம் தேதி இதற்க்கான முடிவுகள் வெளியாகும். எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வு வழக்கம்போல் கோயம்புத்தூரில் நடைபெறும் என்று கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.