புதுக்கோட்டை அருகே கீரனூரில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே கீரனூரில் நடைபெற்ற மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிப் பந்தயத்தில்,19 ஜோடி மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும் பங்கேற்றன. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏழு பெரிய மாட்டு வண்டிகளும், 12 சின்ன மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும் பங்கேற்றனர். எல்லையை கடக்க ஆறு கிலோமீட்டர் தூரம் என நிர்ணயத்து தொடங்கிய பந்தயம் மொத்தம் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில், கொடியை அசைத்ததும் மாட்டு வண்டிகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திச் சென்றன.
இதில், வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், குதிரை வண்டி உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக வண்டியை ஓட்டிய சாரதிகளுக்கு கொடி பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை காண குவிந்த ஏராளாமான பொதுமக்கள் சாலையின் இருபுறம் நின்று ஆரவாரத்துடன் கைகளை தட்டி கண்டு ரசித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








