ஒடிசா அரசியலில் முக்கியத்துவம் பெறும் தமிழர் | பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் வி.கே.பாண்டியன்!

பிஜு ஜனதா தளத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே பாண்டியன் இணைந்துள்ளார்.   தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படும் வி.கார்த்திகேய பாண்டியன்.  இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி…

பிஜு ஜனதா தளத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே பாண்டியன் இணைந்துள்ளார்.  

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படும் வி.கார்த்திகேய பாண்டியன்.  இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார் வி.கே.பாண்டியன்.

அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்திருந்தது.  இதன் பின்னர் அதாவது வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே,  கேபினட் அமைச்சர் அந்தஸ்து பதவி வழங்கப்பட்டது.  ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள அரசின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக் கூடிய 5T திட்டம்,  நவீன் ஒடிசா தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் வி.கே.பாண்டியன்.  ஆட்சி,  கட்சி இரண்டிலும் அதிகாரப்பூர்வமான இடங்களைப் பெற்றுவிட்ட வி.கே.பாண்டியன் விரைவில் ஒடிசா மாநில துணை முதல்வராக அறிவிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.