பொன்னியின் செல்வன் படத்தில் தமிழர்கள் வரலாற்றை சொல்லவில்லை -இயக்குநர் கௌதமன்

சோழர் கொடியான புலி கொடியைக் கூட உங்களால் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இந்த வரலாற்றைக் கையில் எடுக்கிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் கீரை வியாபாரிகளுக்கு…

சோழர் கொடியான புலி கொடியைக் கூட உங்களால் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இந்த வரலாற்றைக் கையில் எடுக்கிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் கீரை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்புவை சென்னை கலைவானர் அரங்கத்தில் இயக்குநர் கௌதமன் சந்தித்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பொன்னியின் செல்வன் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர்’ “பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி மற்றும் அதன் வசூல் மூலம் தொடர்ந்து சினிமா அடுத்த கட்டத்திற்குச் செல்வது மகிழ்ச்சி. ஆனால் வரலாற்றைச் சொல்லும் போது, சரியாகச் சொல்ல வேண்டும். சோழப்பேராசு பெரிய அளவில் ஆட்சி புரிந்தது. இது போன்ற வரலாற்றைச் சொல்பவர்கள், தமிழனாய் இருக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை ஆனால் , தமிழ் உணர்வுடன் சொல்ல வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஆளுமை தன்மை உடன் ஆண்மை தன்மை உடன் இருக்க வேண்டும். சோழர்களின் புலி கொடியைக் கூட காட்ட முடியவில்லை. இது பான் இந்தியா படமாக வேண்டும் என்றால் இந்துத்துவா பேச வேண்டும் தமிழன் அடையாளம் மறைய வேண்டும் என்பது தான் நோக்கம். கங்கை கொண்ட சோழபுரத்தில் வாழ்ந்தவர்கள் வன்னியர்கள், தேவர்கள் அப்படிச் சொல்லவில்லை என்றாலும் தமிழர்கள் என்று கூடச் சொல்லவில்லை ஆண்டது தமிழர்கள்.

தெலுங்கர்கள் என்று எப்படிச் சொல்வீர்கள் என்ன வரலாற்று ஆய்வு உங்களுடையது. இந்த மண்ணுக்கு உரியவன் இந்த மண்ணை ஆண்டான் என்று சொல்லுங்கள் அது தேவர், பறையர் , வன்னியர் என யாராக இருந்தாலும் தமிழன் என்று சொல்லுங்கள் இல்லை என்றால் பெரிய எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இந்துக்கள் அடையாளமாகச் சொல்லப்படும் சங்கராச்சாரியார் எதிர்த்து உள்ளார், வெற்றிமாறன் சொன்னால் ஏற்க முடியவில்லையா? இந்துக்கள் என்ற வார்த்தை அப்போது இல்லை அது சைவம், வைணவம் தான் இருந்தது. ஆண்டது ஒரு தமிழன் என்று சொல்ல முடியவில்லை, புலி கொடியைக் காட்ட முடியவில்லை , இது இரண்டாம் பாகத்தில் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வரும்.

ஆதித்த கரிகாலனை யார் கொன்றார் பாண்டியர்கள் கொன்றார்களா? வட தமிழகத்திற்கும் தென் தமிழகத்திற்கும் பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டு இருப்பீர்களா? கல்கி மாற்றி எழுதி இருக்கலாம். ஆனால், தமிழனைத் தமிழன் கொன்றான் என்று எப்படிச் சொல்வீர்கள்.
மணிரத்தினம் சிறந்த இயக்குநர் அவர் தமிழ்த் திரை உலகத்தில் உள்ளது பெருமை தமிழர்கள் தங்கள் வரலாற்றைச் சொல்லவில்லை என்றால் தமிழன் அல்லாதவன் தங்கள் வரலாறாக மாற்றுவார்கள். 90% புனைவு கதை என்றால் 10% எதை மாற்றினார்கள். ஏன் புலி கொடியைக் காட்டவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் கொடியாக இருந்தது” என்றார்.

மேலும், “சமகாலத்தில் பிரபாகரன் கொடியாக இப்போது அதைக் காட்டினால் இந்திய ஒன்றிய அரசு தடுக்கும் என்று தான். உங்களால் காட்டக்கூடிய சாத்தியக் கூறுகள் இருந்தும் சொல்லவில்லை என்றால் மடைமாற்றும் செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம் . எந்த ஜாதியையும் குறிப்பிட வேண்டாம் தமிழர் என்று சொல்லுங்கள். நான் எடுத்த படங்களில் எல்லாம் எதையும் மறைக்காமல் தான் சொன்னேன் இனியும் சொல்வேன். எவன் ஒருவன் துணிந்து தமிழர் வரலாற்றைச் சொல்கிறீர்களோ அவர்கள் எடுங்கள் இது போன்ற படங்களை இல்லை என்றால் யாராக இருந்தாலும் எதிர்ப்போம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.