கடலூரில் கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் ஒரு மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரம்யா. எம்.எஸ்.சி. படித்துள்ள இவர்
கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும் கடலூர் புதுநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், ரம்யா தனது தாய் வீட்டுக்குச் சென்று வசித்து வந்தார். அப்போது வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறிய கார்த்திகேயன், வேறு வீடு பார்க்கவில்லை எனவும், இதுதொடர்பாக சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனயில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார்
அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். மேலும், ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால், அவரது இறப்பு
குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசும் விசாரணை நடத்தி
வருகின்றார்.