நான் முதல்வன் திட்டம் தலைமுறைக்கும் பயனளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து சிறப்பாக செயல்படும் “நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது :
ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்டு இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று.கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இணைய தல பக்கத்தை இன்று நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.இன்றைய தினம் முரசொலி நாளிதழில் நான் எழுதிய கவிதை ஒன்றை சுட்டிக்காட்டி இருந்தேன்.*நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை நான் அமர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன் என்று எழுதியிருந்தேன்.அந்த வகையில் கலைஞருக்கும் பிடிக்கக் கூடிய திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்.
நான் முதல்வன் திட்டம் என்பது என்னுடைய கனவு திட்டம். திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது.அனைத்து தரப்பினரும் உயர்ந்து வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கு இந்த திட்டம் காரணமாக உள்ளது.
திமுகழக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன.. அதனால் பல தொழிலதிபர்களுடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. புதிய கம்பெனிகள் தொடங்கினாலும் அதில் வேலை செய்யக்கூடிய திறமையான இளைஞர்கள் கிடைக்கக்கூடியது கஷ்டம் என்று சிலர் குறிப்பிட்டு சொன்னார்கள் அதை கவனத்தில் கொண்டு என் கவனத்தில் தோன்றிய நான் முதல்வன் திட்டம்
தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் பன்முக ஆற்றலில் சிறந்து விளங்குகின்றனர், உலகளவில் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு என்னுடைய பிறந்தநாளில் தொடங்கி வைத்தேன்.இதிலிருந்து இந்த திட்டம் என்னுடைய மனசுக்கு எவ்வளவு நெருக்கமான திட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். .தமிழ்நாட்டு இளைஞர்களை உலகத்திலே முதன்மை மாணவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
சில திட்டங்கள் அப்போதைய தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். சில திட்டங்கள் ஓராண்டிற்கு பயன்படக்கூடியதாக இருக்கும். ஆனால் நான் முதல்வன் திட்டம் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய திட்டம். இந்த திட்டத்தை தொடங்கும் போது அதன் நோக்கத்தை முறையாக கொண்டு செல்ல வேண்டும் என்பது முடிவு செய்து அதை கடைசி வர நடத்தி செல்வது தான் அதனுடைய வெற்றி அடங்கியுள்ளது என அமைச்சர்களிடம் பலமுறை கூறியதுண்டு.
அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் ஓராண்டு நிறைவு செய்துள்ளது.நெஞ்சில் நிறைவுடனும் முகத்தில் மலர்ச்சியுடனும் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். உலகை வெல்லும் இளைய தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதை சொல்வதற்காக தான் இந்த விழா நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமான விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் எப்படி மாற்றத்தை உருவாக்கி வருகிறாரோ அதேபோல் நான் முதல்வன் திட்டத்திலும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், இதற்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ், திட்ட அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்ற இலக்கை நிர்ணயித்தோம், முதல் வருடத்திலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது இதுதான் இந்த திட்டத்தின் மிகப்பெரிய சாதனை. இப்படி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மிக சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்பது அடுத்த சாதனையாக உள்ளது.
445 பொறியியல் கல்லூரியில் திறன் பயிற்சி வழங்கப்பட்டது இதில் பயிற்சி பெற்ற 80 ஆயிரத்து 53 பேர் பொறியியல் பட்டதாரிகள் பல்வேறு பணிகளுக்கு பணி நியமனம் பெற்றுள்ளனர். அதில் 65 ஆயிரத்து 34 மாணவர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். 861 கலை கல்லூரிகளில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது, பயிற்சி பெற்ற 93 ஆயிரத்து 230 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு பணிகள் கேட்டு விண்ணப்பித்தார்கள். இதில் 83 ஆயிரத்து 223 மாணவர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்
. நான் முதல்வன் திட்டம மூலமாக தனியார் வேலை வாய்ப்புகள் முகாம் நடத்தப்பட்டது இதில் 5843 பொறியியல் மாணவர்களுக்கு 20 ஆயிரத்து 822 கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது.. இந்தத் திட்டத்தை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்த போது என் வாழ்நாளில் பொன்னாள் என்று சொன்னேன். உண்மையாக அது பொன்னாள் தான் என்று இந்த நாள் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவன் நான். அனைத்து செல்வங்களையும் முதல்வனாக்க உருவாக்கிட திட்டம் தான் இந்த திட்டம். லட்சக்கணக்கான திறமைசாலிகளான நம் செல்வங்கள் ஓராண்டு காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கு இதுவரை 58,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல, திறமையும் சார்ந்தது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







