முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை வந்தார் புதிய ஆளுநர்: நாளை பதவியேற்பு 

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நாளை பதவியேற்கிறார்.

 

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள ஆர்.என்.ரவி, விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தார். அவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோரும் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள அறையில் சிறிது நேரம் கலந்துரையாடினர்.


கடந்த 1976ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய ஆர்.என்.ரவி, மத்திய அரசு உளவு பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 2019ம் ஆண்டு முதல் நாகலாந்து மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த  நிலையில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து சில நாட்களுக்கு முன்பு கிண்டி ராஜ்பவனில் இருந்து விடைபெற்று பஞ்சாப் சென்றது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Advertisement:
SHARE

Related posts

பெரியார் பிறந்தநாள்: சமூகநீதி தினமாக கொண்டாட்டம்.

Ezhilarasan

தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம்: பிரதமர் மோடி!

Halley karthi

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

Jayapriya