முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடி பிறந்தநாள்: கடற்கரையை தூய்மைப்படுத்திய எல்.முருகன், அண்ணாமலை

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜகவில் சார்பில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர். கடற்கரையில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை அண்ணாமலை, எல்.முருகன் ஏற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவுக்கு செப்டம்பர் 17 முக்கியமான நாள். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள். இன்று பல தலைவர்கள் பிறந்திருக்கலாம். ஆனால், உண்மையான சமூகநீதியை வழங்கிவரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது” என்று தெரிவித்தார்.

பிற கட்சியினர் அவரவர் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் தவறில்லை என்ற அவர், நாம் பார்த்து வளர்ந்த தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவருடைய பிறந்தநாளை அடுத்த 20 நாட்களும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் என்றார்.

Advertisement:
SHARE

Related posts

புத்தாண்டில் இரவு லாக்டவுன்!

Saravana Kumar

கன்னியாகுமாரியில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளிப்பார்கள்! – பொன்.ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan

“இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது” – அமைச்சர் சேகர்பாபு

Halley Karthik