இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது தமிழ்நாடு-கனிமொழி எம்.பி.

மக்கள் பிரச்சனை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நேரடியாக சென்று பிரச்னைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில்…

மக்கள் பிரச்சனை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நேரடியாக சென்று
பிரச்னைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 9
வார்டுகளுக்கு இடைத் தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்
கடம்பூரில் காமராஜர் சிலை அருகே நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயண் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். பின்னர் ஒன்பது வார்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கூட்டத்தில் எம்பி கனிமொழி பேசியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு மிக உன்னதமான திட்டம் முன்னேறிய நாடுகளில்
கூட மக்களை தேடி மருத்துவம் போவதில்லை. ஒரு ஹாஸ்பிடலுக்கு போய் நம்ம டாக்டர்
கிட்ட ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அந்த
குடும்பத்துடைய பாதி வருமானத்துக்கு மேல அதுக்கே செலவாகிவிடும்.

இப்படி இருக்கக்கூடிய சூழலிலே மக்களை தேடி உங்களுடைய ஆரோக்கியத்தின் மீது
இருக்கக் கூடிய அக்கறையிலே அரசாங்கம் உங்களைத் தேடி மருத்துவ வசதிகளை
பரிசோதனையை அனுப்பக்கூடிய பெருமை ஒரு அரசாங்கத்திற்கு உண்டு என்றால்
அது தமிழக அரசாங்கத்திற்கு தான் என்றால் அது மிகை இல்லை.

தேர்தலுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டே நாம் வாக்களிக்க வேண்டும். இந்த
தேர்தல் வழியாக அரசாங்கம் செய்யக்கூடிய நல்ல திட்டங்கள் உங்களை வந்து அடைய
வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கக்கூடியது தமிழ்நாடு. நமது மாநிலத்தைப் பார்த்து தான் மதிய உணவு திட்டத்தை நாடு முழுவதும் இந்திய நாடே கற்றுக் கொண்டு இன்று வழங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல நம்முடைய முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.


காலை உணவு திட்டம் என்பது குழந்தைகளுக்கு வளரக்கூடிய பருவத்திலே மிக முக்கியமான ஒன்று. அதை வழங்கக் கூடிய அந்த திட்டத்தை இன்று நம்முடைய முதலமைச்சர் நம்முடைய திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. விரைவிலே எல்லா அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

மக்கள் பிரச்னை எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழக முதல்வர்
நேரடியாக சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். அதற்கு முன்னுதாரணமாக
கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து
நேரடியாக சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை
எடுத்து வருகிறார்.

நல்லாட்சியின் திட்டங்கள் உங்களை வந்து சேருவதற்கான ஒரு வழி வகையை நீங்கள்
உருவாக்கி தரவேண்டும். அதற்கு நீங்கள் இந்த நல்லாட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் கனிமொழி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.