உலக செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக சிறுமி

உலக அளவிலான செஸ் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமியான ஷர்வானிகா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 6 ம் தேதி முதல் 7 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான…

உலக அளவிலான செஸ் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமியான ஷர்வானிகா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 6 ம் தேதி முதல் 7 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேசிய அளவிலான செஸ் போட்டியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து அரியலூர் மாவட்டம் உடையார்பாளத்தை சேர்ந்த அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயதான ஷர்வானிக என்ற சிறுமி கலந்து கொண்டார். இந்த போட்டியில் மொத்த ஆடிய 11 சுற்றுகளிலும் தொடர் வெற்றியை பதிவு செய்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதன் மூலம் ஆசிய அளவிலான செஸ் போட்டி, காமன்வெல்த் செஸ் போட்டி மற்றும் உலக செஸ் போட்டிக்கு தகுதி பெற்று ஷர்வானிகா சாதனை படைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.