தமிழ்நாட்டில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,96,328 ஆக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,033 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,47,504 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 12,791 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களில், சென்னை மற்றும் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 144 பேருக்கு தொற்றுப் பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 168 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கோயமுத்தூரில் 130 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.