முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,697 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 45 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25
லட்சத்து 93 ஆயிரத்து 74 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 232 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 155 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பெகாசஸ் நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை – மத்திய அரசு

Jeba Arul Robinson

”மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை”- கார்த்தி சிதம்பரம்!

Jayapriya

ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்!

Ezhilarasan