பந்து வீச்சில் கலக்கும் மும்பை; தடுமாறும் சென்னை

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி ஆடி வருகிறது.  கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் எந்த அளவுக்கு அர்வமாக இருப்பார்களோ அந்த…

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி ஆடி வருகிறது. 

கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் எந்த அளவுக்கு அர்வமாக இருப்பார்களோ அந்த அளவு ஐபிஎல் போட்டியில் சென்னை மும்பை அணியின் ஆட்டங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இன்று துபாயில் தொடங்கியது. முதல் போட்டியிலேயே சென்னை- மும்பை அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா உடல் தகுதி பெறாததால் இன்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பொல்லார்ட் அணி கேப்டனாக இன்று வழிநடத்துகிறார்.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டு பிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். சென்னை அணி வீர்ர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும்விதமாக டு பிளசிஸ் 3 பந்துகளை சந்தித்து வந்த வேகத்திலேயே பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். இதையடுத்து களமிறங்கிய மொயின் அலியும் வந்த வேகத்திலேயே வெளியேறி ரசிகர்களுக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி அளித்தார்.

இவரைத்தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு ஆடம் மில்னே பந்து வீச்சில் 3 பந்துகளை மட்டும் சந்தித்து காயமடைந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சின்ன தல என சென்னை ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்னில் வெளியேறினார். அவரையடுத்து வந்த அணி கேப்டன் தோனி 5 பந்துகளை சந்தித்து 3 ரன்களை மட்டும் சேர்த்து பெவியின் திரும்பினார்.

சென்னை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருவதால் இரு அணி வீரர்களும் சமூக வலைதளங்களில் தங்களது சண்டையை துவக்கியுள்ளனர். இரு அணிகளும் இதுவரை 33 ஆட்டங்கள் நேருக்கு நேர் மோதியதில் மும்பை அணி 20 போட்டிகளிலும் சென்னை அணி 13 போட்டிகளிலும் வெள்ளி பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.