முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3ஆம் அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. ஜனவரி தொடக்கத்திலிருந்து மளமளவென உயர்ந்து  வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,14,235 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 35 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,073 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 17,456 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 28,06,501 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 1,70,661 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 8,007 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 7,298 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 3,082 பேருக்கும், செங்கல்பட்டில் 2,194 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“வேளச்சேரி சம்பவம் தேர்தல் விதிமீறல்”-சத்யபிரதா சாகு!

Ezhilarasan

தமிழ்நாட்டில் இன்று 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Halley Karthik

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மூடல்!

Saravana Kumar