முக்கியச் செய்திகள் சினிமா

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

புதுமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், அவருக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்து வருகிறது. படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தப்படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். ”ஒரு குற்றவாளி எங்க தெரியுமா உருவாகுறான்” என பட ட்ரெய்லரில் விஷால் பேசும் வசனம் ர்சிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

காவல்துறையினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

Ezhilarasan

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல்.

Halley Karthik

‘மதுரை மீனாட்சி கோவிலே எனக்கு தாய் வீடு’ – விசிறி தாத்தா

Arivazhagan CM