முக்கியச் செய்திகள் விளையாட்டு

மும்பையிடம் போராடி வென்றது டெல்லி கேபிடல்ஸ்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி போராடி வெற்றி பெற்றது. 

மும்பை, டெல்லி அணிகள் இடையே இன்று பிற்பகல் தொடங்கிய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரோகித் சர்மா 7 ரன்னில் வெளியேறினார். இவரையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே குயின்டன் டி காக் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த திவாரியை 15 ரன்னிலும், அதிரடி வீரர் பொல்லார்ட்டை 6 ரன்னிலும் ஹர்த்திக் பாண்டியாவை 17 ரன்னிலும் வெளியேற்றி டெல்லி வீரர்கள் அசத்தினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை சேர்த்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளித்தது மும்பை அணி. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷாவை 6 ரன்னிலும், தவானை 8 ரன்னிலும், பின்னர் வந்த ஸ்மித்தை 9 ரன்னிலும் வெளியேற்றினர். இதன்மூலம் வெற்றி விகிதம் மும்பை அணி பக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இவர்களை தொடர்ந்து வந்த பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் சிங்கிள் ஆடிக்கொண்டிருக்க அக்ஸர் பட்டேல் 9 ரன்னிலும், ஹிட்மையர் 15 ரன்னிலும் அவுட்டாகினர். பின்னர் வந்த அஷ்வினும், ஸ்ரேயாஸும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை 12 போட்டிகள் விளையாடியுள்ள டெல்லி அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: தொழில்நுட்ப வல்லுநர் குழு

G SaravanaKumar

விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் மூடல்..வேதனையில் நிறுவனர்

Janani

அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

EZHILARASAN D