தமிழகத்தில், புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 61 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 193 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்து 13 ஆயிரத்து 572 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 561 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து 43 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 12 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில், புதிதாக 352 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 லட்சத்து 39 ஆயிரத்து 483 ஆக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டட்ததில், நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 53 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 56 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தருமபுரி, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை. அரியலூரில், ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 17 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்று பதிவாகியுள்ளது.







