தமிழ்நாடு பிரெயிலி சதுரங்க சங்கம் மற்றும் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி
இணைந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான FIDE ரேட்டிங் சதுரங்க போட்டி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் தொடங்கியது.
இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா,ஒரிசா, மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா முதலிய மாநிலங்களைச் சேர்ந்த 120க்கும் மேலான ஏழு வயது சிறுவர் முதல் எண்பத்தாறு வயது முதியவர் வரை அனைத்து வயதிற்குற்பட்ட பார்வையற்ற போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் தேசிய அளவில் தேர்வாகி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் போட்டியாளர்களும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
13ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஒன்பது சுற்றுகளாக நடக்கவிருக்கும் இப்போட்டியானது தமிழ்நாட்டின் தென் மாவட்டமான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி விசாலயன்கொட்டை கலாம் கவி கிராமத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
போட்டியின் இறுதியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரொக்கத்தொகை ரூ. 1 லட்சம் இரண்டாம் பரிசாக ரூ. 50 ஆயிரம் மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் பங்கேற்பு பரிசுகளும் வழங்குவதாக தமிழ்நாடு பிரெயிலி சதுரங்க சங்கத் தலைவர்
மற்றும் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் சேது குமணன் அறிவித்துள்ளார்.
போட்டியின் தொடக்க நாளில் மாவட்ட மாற்றுத்திரனாளிகள் நல அதிகாரி முனைவர் கதிர்வேலு, சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் முனைவர் சேது குமணன் மற்றும் கல்லூரியின் இயக்குநர் கோபால், ஆலோசகர் தர்மராஜ், கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
—-ரெ.வீரம்மாதேவி