நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டாவுக்கும் பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
1965-ம் ஆண்டு லோக்கூர் கமிட்டி நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளார் நமது பிரதமர் நரேந்திர மோடி. இந்த மகத்தான முடிவு நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கும் தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த நன்றிகள் என்று அந்தப் பதிவுகளில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.








