ஜிப்மர் மருத்துவமனை தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை: தெரியாமல் நடந்த தவறு-தமிழிசை செளந்தரராஜன்

ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சம்பவம் தெரியாமல் நடந்த தவறு என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச பொது சுகாதாரப் பள்ளி தொடக்க விழா இன்று…

ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சம்பவம் தெரியாமல் நடந்த தவறு என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச பொது சுகாதாரப் பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதையடுத்து, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் தாய் வாழ்த்து பாடியே ஆக வேண்டும் என ஜிப்மர் இயக்குனரை வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் நடுவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதுகுறித்து, தமிழிசை செளந்தரராஜன் செய்தியார்களிடம் கூறுகையில், ஜிப்மர் மருத்துவமனையில் தன்வந்திரி வாழ்த்து பாடுவது மருத்துவத் துறையின் வழக்கம். ஆனால், தமிழ்தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கப்பட்டது தெரியாமல் நடந்த தவறு. தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என ஜிப்மர் இயக்குனரை நான் கேட்டுக் கொண்டேன். உடனடியாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இனிவரும் காலங்களில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் என இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். புதுச்சேரியில் நிலம் சம்மந்தமான அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மாநில வளர்ச்சிக்கானது. இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.