திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்!

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் நடந்த திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வந்திருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் நடந்த திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வந்திருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

எடப்பாடி பழனிசாமியுடன் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உடன் இருந்தார்.

முன்னதாக, வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி அவர்களின் பேரக் குழந்தைகளை வாழ்த்த வானூர் வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் உற்சாக வரவேற்றனர்.

கடந்த 15 ஆம் தேதி வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின்  பேரக் குழந்தைகளுக்கு ஆரோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் வேலை நிமித்தமாக விழாவிற்கு வராததால் இன்று சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி பேரக் குழந்தைகளை வாழ்த்த அவரது இல்லத்திற்கு சென்று குழந்தைகளை வாழ்த்துகிறார்.

முன்னதாக, எடப்பாடி வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை வாழ்த்திய பின்னர் அப்பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார். இதனை தொடர்ந்து ஆரோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கண்டமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.பின்னர் தொண்டர்கள் முன் உரையாற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.