மற்றொரு “fanboy” சம்பவமாகுமா வேட்டையாடு விளையாடு-2 ?
கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து “வெந்து தணிந்தது காடு” எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இவ்விழாவைச் செப்டம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
இவ்விழாவில், கமல்ஹாசன் கலந்து கொள்ளும் பட்சத்தில் வேட்டையாடு விளையாடு பாகம் 2 குறித்து அறிவிப்பையும் அப்படத்தையும் வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனமே தயாரிக்கும் எனும் அறிவிப்பையும் வெளியிடுவார்கள் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதனால், இந்த இசைவெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் கவுதம் விளையாடு பாகம் 2 ஸ்கிரிப்டை எழுதி வருவதாகவும் படத்தின் முதற்கட்ட பணிகள் குறித்த தேடலில் இருப்பதாகவும் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.







