“தமிழக வெற்றிக் கழகம்… தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்” – தவெக கொள்கை பாடல் கூறுவது என்ன?

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட…

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் மேடையில் இருந்தே 100 அடிக் கம்பத்தில் கொடியேற்றினார்.

இந்த மாநாட்டில் தொடர்ந்து கட்சியின் கொள்கைப் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை கீழே காணலாம்..

வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…

வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இதோ…
அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ…
தமிழ்த்தாயின் பிள்ளை தலைச்சன் இதோ…
உழைக்கும் இனத்தின் விளைச்சல் இதோ…

வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…

வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…

தமிழ் வணக்கம் அனைவருக்கும்
புது சரித்திரம் இனி பிறக்கும்..
போர் துவக்கம் யார் தடுத்தும்
இது நட நடவென நடக்கும்…

பறை முழங்கிட தரை நடுங்கிட
தலைமுறை தனை நிமிர்த்தும்…
இனம் விடுதலையினை சுவைக்கும்
ஒளி நிரந்தரமென நிலைக்கும்…
நில்லாமல் போராடு வெல்லும் வரை
இல்லாமை இல்லாமல் செல்லும் வரை…

துப்பார்க்கு துப்பாய தூஉம் மழை…
நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை
ஐயா வாகை வாகை வாகை
வெற்றித் தமிழ் வாகை…

யானை யானை யானை…
இது ரெட்டைப் போர் யானை

ஐயா வாகை வாகை வாகை…
வெற்றித் தமிழ் வாகை

யானை யானை யானை…
இது ரெட்டைப் போர் யானை

கொள்கைத் தலைவர்கள் யார்?
கொள்கை வேர்தன்னைப் பார்…

கொள்கைத் தலைவர்கள் யார்?
கொள்கை வேர்தன்னைப் பார்…

மொழி எழுந்திட தரை விழுந்திட்ட
குருதியில் மன உறுதியும் பெற
மதம், இனம், மொழி, பாலினமது சமமெனப் புது யுகம் பிறந்திட
நீர், மருத்துவம், காற்று, உணவோடு, கல்வி உலகத் தரமடைந்திட
அறிவியலோடு அழகிய தமிழ்நாடெனப் புகழ் வானுயர்ந்திட
நமது உரிமை நமது பெருமை
கரங்கள் இணைய மாறும் நிலைமை
மண் பயனுற பெண் பயனுற
இத்தலைமுறை புத்தொளிப்பெற
வெற்றித் தலைவன் வழியில்
நித்தம் செல்வோம்…

கொள்கைத் தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம்…
மொழித்தியாக முன்னோரைக் கொண்டாடவே
மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே
விழிப்போம் உழைப்போம் நமக்காகவே…
இலக்கே நமக்கே… ஜெயம் நாளையே…

தமிழக வெற்றிக் கழகம்
எதிர்காலம் அமைக்கும் கழகம்

தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்…
நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே…

முன்னேற்றம் வருதே… கொண்டாட்டம் தருதே…
நல்வாக்கும் உனதே… நல்லாட்சி நமதே…
முன்னேற்றம் வருதே… கொண்டாட்டம் தருதே…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…
யாதும் ஊரே… யாவரும் கேளிர்…
தமிழக வெற்றிக் கழகம் வாழீர்…
புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.