“நீட் தேர்வுக்கு எதிரான விஷயத்தில் தமிழ்நாடு தெளிவாக உள்ளது” – அமைச்சர் அருண்ராஜ்!

தமிழகத்தில் மண்டல அளவில் மருத்துவ இயக்குநர் பணியிடங்கள் நான்கு இடங்களில் உருவாக்க உள்ளோம் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “எழூம்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். ரத்த புற்றுநோய் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்க இது பயன்படுகிறது.

இந்தியாவிலே ஒரு அரசு மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்றால் அது இங்கே தான். 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் உருவாக்க பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தலைமைச் செயலத்தில் மத்திய அரசின் தேர்வு சீர்திருத்த குழு உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசி இருந்தனர். அப்போது அந்த குழுவிடம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்றும் நீட் தேர்வுக்கு எதிரான விஷயத்தில் தமிழ்நாடு தெளிவாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தோம் மேலும் அந்த குழுவிடம் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தையும் கூறி உள்ளோம். மேலும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக பேசி உள்ளோம். மேலும் கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் எனவும் அந்த குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து உள்ளோம் என தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தான் பங்கேற்காதது குறித்து பேசியவர், இது ஒட்டுமொத்த அரசின் கூட்டுபொறுப்பு என தெரிவித்தார். தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் தீ விபத்துக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மண்டல அளவில் மருத்துவ இயக்குநர் பணியிடங்கள் நான்கு இடங்களில் உருவாக்க உள்ளோம்.

மருத்துவ கல்வி இயக்குநர் அதிகாரமும் மண்டல மருத்துவ கல்லூரி இயக்குநர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளோம். அதற்கு ஏற்ப மருத்துவ கல்வி இயக்குநர்களுக்கு அரசிடம் இருந்து சில அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. அதற்காக மருத்துவ சங்ககளை அழைத்து பேசி உள்ளோம், இது முறைப்படி நடந்துவோம் எனவும் கூறி அதற்கான பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என கூறினார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அவரது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.