#SouthAsianJuniorAthleticsChampionship – தமிழ்நாடு வீராங்கனை அபிநயா 2 தங்கப் பதக்கம் வென்று அசத்தல்!

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா 2 தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். சென்னை நேரு விளையாட்டரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டி வருகிறது.…

Tamil Nadu's Abhinaya wins gold in women's 100m race

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா 2 தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபால் என 7 தெற்காசிய நாடுகளில் இருந்து 174 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்தப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இத்தொடரில், இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் முதலிடத்தையும், இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

இதையும் படியுங்கள் : AnnapurnaHotel விவகாரம் : “யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்” – BJP தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

இந்நிலையில், மகளிர் 100மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை அபிநயா தற்போது 100 மீ தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அபிநயா 2 தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.