இரண்டு ஆண்டுகளில் நெகிழி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் உயர் கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு மின்விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒலிம்பியா போட்டி தொடர்பாக அதன் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து பேச உள்ளதாகவும், அனைத்து மாவட்ட விளையாட்டு அரங்குகளிலும் இரண்டு ஆண்டுகளில் சின்தடிக் டிராக் மாற்றப்படும் எனவும் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்’
சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








