முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகம், தமிழ்நாடு விவாதம்; தமிழ்நாடு என்று பெயர் வைக்க நடைபெற்ற போராட்டங்கள்

தமிழகம், தமிழ்நாடு என்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் தமிழ்நாடு என்று பெயர் வைக்க நடைபெற்ற போராட்டங்கள் குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்…

நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல் என்கிறார் தொல்க்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணார். செந்தமிழ்நாடெனுன் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்கிறார் மகாகவி பாரதி. ஆனால், இந்திய அரசு நிர்வாகரீதியில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்கிற பெயர் எளிதில் கிடைத்துவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரலிங்கனார், மெட்ராஸ் ஸ்டேட், என்று அழைக்கப்பட்ட தமிழ் நிலப்பரப்பை ‘ தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும், இந்தியைத்
கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 1956ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி, விருதுநகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
காமராஜர், அண்ணா, மாபொசி, ஜீவா உள்ளிட்ட பல தலைவர்கள் சொல்லியும் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. உண்ணாவிரதம் இருந்த அவர், 75 நாட்களுக்குப் பிறகு தனது 78வது வயதில் உயிரை விட்டார் சங்கரலிங்கனார்.

இதற்கு முன்னர் ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீ ராமுலு என்பவர் ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிரைத் துறந்தார். தொடர்
நெருக்கடிகளால், மொழிவாரி மாநிலங்களை உருவாக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த பகுதிகள் ஆந்திரா, கன்னடம் பேசுவோர் நிறைந்த பகுதி கர்நாடகம், மலையாள மொழியினருக்கு கேரளா ஆகிய மாநிலங்கள் உருவாகின.

சங்கரலிங்கனார் உயிர்த் தியாகம் செய்தும் அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக மதராஸ் மாகாணமாக இருந்தது மதராஸ் ஸ்டேட் என்று மட்டும் மாறியது. மாபொசியின் தமிழரசுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தினர். சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பெயர் மாற்றத்தை கோரி கொண்டுவந்த தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டதும் ஒரு கசப்பான உண்மை இருக்கிறது.

தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றம் செய்வது பிரிவினையை முன்வைப்பது போல் உள்ளது என்கிற அச்சத்தாலும், பெயரை மாற்றினால் ஆவணங்களில் எல்லாம் மாற்ற
வேண்டும். இது சாத்தியமில்லை என்று சொல்லியும் அப்போதைய அரசு தவிர்த்தது. ஆனால், நிர்வாக வசதிக்கென பிரிட்டிஷார் ‘மதராஸ் மாகாணம்’ என்று சொன்னாங்க. அத
நாமும் அப்படியே தொடர வேண்டுமா? நம்ம அடையாளங்களை நாம் காக்க வேண்டாமா? என்கிற கேள்வியை முன் வைத்து பெயரை மாற்றியே ஆக வேண்டும் என்று
விடாப்பிடியாக போராட்டங்கள் தொடர்ந்தன.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே போராட்டங்கள் நடைபெற்றாலும் 1967ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அண்ணா முதலமைச்சராக இருந்த போது
சட்டப்பேரவையில் பெயர் மாற்றக் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தமிழ்நாடு… தமிழ்நாடு… தமிழ்நாடு என்று முதலமைச்சர் முழங்க வாழ்க…வாழ்க.. வாழ்க
என்றனர். இதையடுத்த ஓராண்டிற்கு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டு, மதராஸ் ஸ்டேட் தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

குறிப்பாக, 1924ம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக் காரியாலயம் என்று திருச்சியில் இருந்தது. கட்சிரீதியில் தமிழ்நாடு என்று இருந்தது. ஆனால், ஆட்சி,
நிர்வாகரீதியில் தமிழ்நாடு என்பதை காங்கிரஸ் தவிர்த்ததும் வியப்பான ஒன்றாக இருக்கிறது. இந்தியா என்கிற சொல்லுக்கு முந்தையது தமிழ்நாடு. இந்த வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்.

பெயரில் என்ன இருக்கிறது என்று கடந்து சென்று விட முடியாது. பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது. தனித்த அடையாளம், வரலாறு இருக்கிறது என்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மனைவியை கொலை செய்த தீயணைப்புத் துறை வீரருக்கு ஆயுள் தண்டனை உறுதி

Arivazhagan Chinnasamy

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை: தேன்கனிக்கோட்டை, ஓசூர் பள்ளிகளுக்கு விடுமுறை

Web Editor

விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

EZHILARASAN D