மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார் கள்ளழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அழகர் மலையில் சுந்தரராஜ பெருமாளை வேண்டி சுதபஸ் முனிவர் தவம் புரிந்ததாகவும் அப்போது அவ்வழியே…

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

அழகர் மலையில் சுந்தரராஜ பெருமாளை வேண்டி சுதபஸ் முனிவர் தவம் புரிந்ததாகவும் அப்போது அவ்வழியே வந்த துர்வாச முனிவரை வணங்காததால், தவளையாக மாறும் சாபம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், கள்ளழகரை சுதபஸ் முனிவர் வேண்டியதை அடுத்து, அவர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கியதாகவும் நம்பப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சி மதுரை தேனூர் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக, கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிததார்.

வைகையாற்றின் கரையில் உள்ள தேனூர் மைய மண்டபத்தில் 62 ஆண்டுகளுக்கு பின் கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். நீண்டகாலமாக சேதம் அடைந்து காணப்பட்ட தேனூர் மண்டபம் 40 லட்ச செலவில் சீரமைக்கப்பட்டது. இதயடுத்து, கள்ளழகர் அங்கு எழுந்தருளியுள்ளார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.