தமிழகத்தில் கோடை மழை மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என வானிலை தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் காற்றாலும் , சுட்டெரிக்கும் வெயிலாலும் மக்கள் பரிதவித்து வந்த நிலையில், நேற்று பெய்த மழை, இயற்கையான குளிர்ச்சியை , மக்களுக்கும், பூமிக்கும் வழங்கியது.
இந்நிலையில் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டின் பல மாநிலங்களில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன.







