தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்; நிதியமைச்சர்

தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவை பொதுவிவாதத்தின் போது பேசியுள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்…

தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவை பொதுவிவாதத்தின் போது பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பல்வேறு ஆராய்ச்சிகளில் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்பதையே காட்டுவதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் செல்போன் வைத்துள்ளதாகவும், 75 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு தமிழகத்தில் சொந்த வீடு உள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் 66% சதவீதம் பேர் இருசக்கர வாகனம் வைத்திருப்பதோடு, 50% வீடுகளில் குளிர்சாதன பெட்டி உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், 52% நபர்கள் வேலை தேடும் இடங்களில் இல்லை எனவும், முதியோர் 15% நபர்களுக்கு மருத்துவ உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், மாவட்ட வாரியாக முதியோருக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளும் குறைக்கப்பட வேண்டும் என்று தெரியவந்துள்ளதாகவும் அவர் பேசினார். இந்நிலையில், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற் கொள்வதற்கான பட்ஜெட்டாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.