ஆசிரியர் தேர்வு தமிழகம்

இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று தொடங்கினார். சென்னையை அடுத்த போரூர் சந்திப்பில் திறந்த வாகனத்தில் நின்றபடி பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்தார். ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசி வருவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, தான் செய்வதையே ஸ்டாலின் சொல்லி வருவதாகவும் பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து, அம்பத்தூரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சி திமுக என விமர்சித்தார். அதிமுக ஆட்சியை எந்த காரணத்தாலும் திமுகவால் வீழ்த்த முடியாது என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் வாங்கபட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூரில், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசிய முதலமைச்சர், டெல்டா மாவட்டங்களில் 31 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன், நெல் கொள்முதல் செய்து, தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக கூறினார். தமிழக வரலாற்றிலேயே வறட்சிக்காக நிவாரணம் கொடுத்த ஒரே அரசு, அதிமுக அரசு தான் என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் உறுதியளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

234 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

Halley karthi

ஆவடியில் போட்டியிட விரும்புகிறேன்: அமைச்சர் பாண்டியராஜன் விருப்பம்!

Jayapriya

9 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Ezhilarasan

Leave a Reply