முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் பேனர் வைத்தால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

சென்னை மாநகரில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

ஸ்மார்ட் பைக் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்களின் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னை மாநகராட்சியின் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க, இளைய தலைமுறையினருக்கு சைக்களிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். 100 ஸ்மார்ட் பைக் நிலையங்களில் 1500 சைக்கிள்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது, இது விரைவில் 500 நிலையங்களாகவும், 5ஆயிரம் சைக்கிள் ஆகவும் மாறும் என்ற அவர் இந்த திட்டம் லாப நோக்கத்திற்க்காக தொடங்கவில்லை, தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆனாலும் இன்னும் லாபம் இல்லை, ஆனால் தற்போது வரவேற்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

இ-பைக்குகளுக்கு நிலையங்களிலியே சார்ஜ் செய்வதற்கு வசதியாக சூரிய ஒளி மூலம் சாரஜ்ர் அமைக்கும் திட்டமிடப்பட்டு வருகிறது, விரைவில் சார்ஜிங் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டதில் எந்தவித முறைகேடும் இல்லை என விளக்கம் அளித்தார். மேலும், சென்னை மாநகரில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement:
SHARE

Related posts

பரிகார பூஜை செய்வதாகக் கூறி நகைகளை திருடிய நபர் கைது!

Jeba Arul Robinson

ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

Jeba Arul Robinson

சென்னை வெள்ளம்; சட்டப்பேரவையில் நடைபெற்ற காரசார விவாதம்

Saravana Kumar

Leave a Reply