மாமல்லபுரத்தில் தமிழ் நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026 இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுற்றுலாத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 48 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ;
மனிதர்களான இன்றைக்கு நாம் பண்பாட்டு ரீதியாக முன்னேறிக்கிறோம். அதற்கு மனித சமுதாயத்தோட பயணங்கள் மிக முக்கியமானது.
இந்தப் பயணங்கள் நமக்கு ஏராளத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. பயணங்கள் என்பது புத்தகம் இல்லாத வகுப்பறை. அப்படிப்பட்ட பயணங்களை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்த இந்த உலக அளவையே உச்சி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
இப்படிப்பட்ட சுற்றுலா மாநாடு தமிழ்நாட்டில் முதல்முறையாக நடப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சேர்க்கிறது. அதே சமயம் கூடுதல் பொறுப்புணர்வையும் கொடுக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 612 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 128 கோடியே 97 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், சுமார் 47 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால் இது போதாது தமிழ்நாட்டை நோக்கி இன்னும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவேண்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஏற்ப உலகத்தில் உள்ள அத்தனை மக்களையும் உறவினர் உறவினர்களாக நினைத்து அன்போடும் நட்போடும் பழகக் கூடியவர்கள் தான் தமிழ்நாட்டு மக்கள். அதனால் வெளிமாநில மக்களும் வெளிநாடு மக்களும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்.
இங்கு சிறப்பான போக்குவரத்து வசதி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமிய சுற்றுலா, கடலோர சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவம் மற்றும் உடல்நலம் பேணும் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, திரைப்பட சுற்றுலா என 12 முன்னுரிமை சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2003 வெளியிட்டு இருக்கிறோம்.
சுற்றுலாத்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு சுற்றுலாவை சேர்ந்த 13 தகுதியான திட்டங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். நிறுவனங்களோட முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில் மூன்று வகையாக வகைப்படுத்தி முதலீட்டு மானியம், கூடுதல் முதலீட்டு மானியம், கட்டமைப்பு ஊக்கத்தொகை மற்றும் மின் பயன்பாட்டில் கட்டண சலுகை வழங்கப்படும். இதையெல்லாம் உலக அளவில் கொண்டு செல்ல இந்த சுற்றுலா உச்சி மாநாடு நிச்சயம் துணை நிற்கும்.







