தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படக் கூடாது என்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், நெல்லையில், நவோதயா பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தற்காலிகமானது என்றாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலை கருதியே பொதுச் சொத்துக்கள் குத்தகைக்கு விடப்படுவதாக வும், மத்திய அரசின் சொத்துக்கள் ஒருபோதும் தனியார் மயமாகாது என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுகவுடன் கூட்டணி நடைமுறையில் உள்ளதாக ஜி கே வாசன் தெரிவித்தார். கோடநாடு விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.வாசன், திமுக அரசு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்றும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல் படக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.







