கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மூத்த அரசியல்வாதியும், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கொடியேரி பாலகிருஷ்ணன், புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது உடல் இன்று காலை கேரள மாநிலம் கண்ணூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரக்கூடிய நிலையில்ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் கேரள மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தளச்சேரிக்கு விமானம் மூலமாக கொன்டு செல்லபட்டடு, அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தபட்ட பிறகு நாளை 03.10.22 மதியம் 3 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
2022 ஆகஸ்ட் மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்தது வரை கொடியேரி பாலகிருஷ்ணன் சிபிஎம் கேரளாவில் கட்சியை வழிநடத்தினார். மேலும் இவர் கேரளாவில் சிபிஎம் கட்சியின் தேசாபிமானி என்ற மலையாளப் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவருக்கு எஸ்.ஆர்.வினோதினி என்ற மனைவியும், பினாய் கொடியேரி, பினீஸ் கொடியேரி என்ற இரு மகன்களும் உள்ளனர்.