கொரோனா தொற்றை வைத்து தமிழக அரசு கொள்ளை அடித்தது! – மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்றை வைத்து தமிழக அரசு கொள்ளை அடித்ததாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையை அடுத்த மதுரவாயல் அடையாளம்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின்…

கொரோனா தொற்றை வைத்து தமிழக அரசு கொள்ளை அடித்ததாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்த மதுரவாயல் அடையாளம்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியே மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வருவதாக அவர் சாடினார்.

கொரோனா தடுப்பூசியை பிரதமரும், தமிழக முதலமைச்சரும் போட்டுக் கொள்ளவில்லை என்றும், மக்களை வைத்து தான் சோதனை செய்வதாகவும் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறினார். கொரோனா தொற்றை வைத்து தமிழக அரசு கொள்ளையடித்தது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply