இந்தியாவின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளது! – ராகுல்காந்தி

இந்தியாவின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்த காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி முதலாவதாக கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். சின்னியம்பாளையத்தில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட…

இந்தியாவின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்த காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி முதலாவதாக கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். சின்னியம்பாளையத்தில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதமர் மோடி புரிந்து கொள்வதில்லை என சாடினார். தமிழகத்தில் உள்ள அரசாங்கம் எந்த சமரத்திற்கும் தயாராக உள்ளதாக கூறிய அவர், சிபிஐ-யை பயன்படுத்தி தமிழக அரசையும், மக்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம் என மோடி நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டியில் படுகர் இன மக்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அவர்களுடன் நடனமாடிய ராகுல்காந்தி, படுகர் இன பெண்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

கோவையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேருந்து நிலையம் முன்பாக ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழக மக்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என பிரதமர் எண்ணுவதாக குற்றம்சாட்டிய ராகுல், அது ஒருபோதும் நடக்காது என்பது அவருக்கு தெரியாது என கூறினார். இதைத் தொடர்ந்து, அங்குள்ள பேக்கரி ஒன்றில் இளைபாறியபடி, கட்சி நிர்வாகிகளுடன் அவர் தேநீர் அருந்தினார்.

இதையடுத்து, அனுப்பர்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கொடிகாத்த குமரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுடம் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்த அவர், பெரு முதலாளிகளுக்கு கடன் வழங்கியதே இதற்கு காரணம் என்றும் சாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply