ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியமான விளையாட்டு. ஜல்லிக்கட்டைத் தடை செய்யக்கூடாது என்பதற்காகத் தமிழக அரசு சிறப்பாக முயற்சி செய்து வருகிறது என நடிகர் சசிக்குமார் பேசினார்.
அறிமுக இயக்குநர் ஹேமந்த் படத்தை இயக்கியுள்ள ‘காரி’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷமன் குமார் தயாரித்துள்ளார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாகப் பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 25ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் காரி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் சசிகுமார் பேசியது, ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியமான விளையாட்டு. ஜல்லிக்கட்டைத் தடை செய்யக்கூடாது என்பதற்காகத் தமிழக சிறப்பாக முயற்சி செய்து வருகிறது. என்றார். ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய காரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லட்சுமண், ஜல்லிக்கட்டு சார்ந்து படம் எடுத்திருப்பதால் படத்தைத் தடை செய்யக் கோரி எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் விதமாக நாங்கள் படம் எடுத்து உள்ளோம் என்றார். குதிரைப் பந்தயம் என்பது பணக்காரர்களின் விளையாட்டு ஜல்லிக்கட்டு பாமர மக்களின் விளையாட்டு அதனால் தான் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய நினைக்கிறார்கள் என்றார்.







