முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து: கோல் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றிய குரோஷியா-மொராகோ அணிகள்

இன்று நடந்த குரோஷிய – மொராகோ அணிகளுக்கான போட்டியில் இரண்டு அணியிலிருந்தும் கோல் ஏதும் விழாததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்றில் நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி அமெரிக்கா, வேல்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்றும் லீக் சுற்றில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று பிரான்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அதில் அபாரமாக விளையாடிய பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

FIFA உலகக்கோப்பை தொடரில் குரூப் F பிரிவில் இடம்பெற்றுள்ள தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள குரோஷிய அணியும், 22வது இடத்தில் உள்ள மொராகோ அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் இரண்டு அணியிலிருந்தும் கோல் ஏதும் விழாததால் ஆட்டம் சமனில் முடிந்தது. அணி கடந்த முறை இறுதிப் போட்டி வரை சென்று அசத்திய குரோஷிய அணி கோல் அடிக்காமலிருந்தது ரசிகர்களைப் பெரிதும் ஏமாற்றியது.

போட்டி தொடங்கி அரைமணி நேரம் கடந்த நிலையிலும் இரு அணிகளும் கோல் அடிக்காமலிருந்தது. தொடர்ந்து இதே நிலை நீடித்ததால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

பின் இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு ஃபிரி கீக் வாய்ப்பு கிடைத்தும் அதை வீணடித்து கோல் வாய்ப்பை தவற விட்டது. பின் போட்டி 90 நிமிடங்கள் முடிந்த நிலையில், கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் ஆட்டத்தைச் சமனில் முடித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

G SaravanaKumar

6 தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Web Editor

கிரேன் மோதி விவசாயி உயிரிழப்பு

G SaravanaKumar