முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, வாரம்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வார். கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரை, சைக்கிள் பயணித்து அவர் பயிற்சி செய்வார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, சில மாதங்களாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்த மு.க.ஸ்டாலின், இன்று மீண்டும் பயிற்சி மேற்கொண்டார். கிழக்கு கடற்கரை சாலையில், சைக்கிளில் சென்ற முதலமைச்சர், வழியில் பொதுமக்களை சந்தித்து பேசினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.







