அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

ஜி20 மாநாடு விருந்து நிகழ்ச்சியின் போது  அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கை குலுக்கினார்.   ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. …

ஜி20 மாநாடு விருந்து நிகழ்ச்சியின் போது  அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கை குலுக்கினார்.

 

ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது.  இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் அதற்கு  பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ரஷ்யா , ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டின் முதல் நாளில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.  டெல்லி பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான அறையில் நடைபெற்ற இந்த சிறப்பு இரவு விருந்தில்  முன்னாள் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட 170 முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  நமது நாட்டின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலான சைவ, அசைவ உணவுகள் விருந்தில் இடம்பெற்றன.

விருந்தின்போது 50 க்கும் மேற்பட்ட இசைகலைஞர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்துக்கு ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில், நாடு முழுவதும் சுவையான 500 உணவு வகைகளை தேர்வு செய்து பங்கேற்ற தலைவர்களுக்கு பரிமாறப்பட்டன.

இந்த நிலையில் ஜி20 மாநாடு விருந்து நிகழ்ச்சியின் போது  அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கை குலுக்கினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.