34.4 C
Chennai
September 28, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சைரன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு  அவர் நடித்துள்ள  “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக் போஸ்டர் வெளியானது.

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரான நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. அவரது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களுக்கு பிரத்தியேக விருந்தாக, சைரன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வெறும் போஸ்டராக இல்லாமல் ஆச்சர்யம் தரும் ஒரு சிறு வீடியோவாக இந்த ஃப்ரீபேஸ் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஃப்ரீபேஸ் லுக்கில், 21 வருட திரைப்பயணத்தில் நடிகர் ஜெயம் ரவி இதுவரை திரையில் தோன்றியிராத தோற்றத்தில், சால்ட் & பெப்பர் லுக்கில் மிரட்டலாக காட்சியளிக்கிறார். இக்கதாப்பத்திரத்திற்காக தன் உடலை மாற்றி 1 1/2 வருடங்கள் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அனுபவம், அமைதியும் கலந்த தோற்றத்தில், பார்க்கும்போதே பயம் தரும் கோபமான முகத்துடன், அசத்தலாக காட்சியளிக்கிறார் ஜெயம் ரவி. இதற்கு நேரெதிராக இளமையும் துள்ளலுமான இன்னொரு பாத்திரத்திலும் அவர் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது.

மேலும் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். அதேபோல நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். தற்போது வெளியாகியிருக்கும் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram