சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (பிப்.10) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவு பதப்படுத்தப்படுதல் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்லூர் மாவட்டங்களில் அமையவுள்ள தொழிற்சாலைகளின் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







