அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யா வின் டேனில் மெட்வடேவ் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யா வின் டேனில் மெட்வடேவ் மற்றும் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மெட்வடேவ், 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள் ளார். இது அவருக்கு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம். கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.








