முக்கியச் செய்திகள் உலகம்

கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து!

கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, அம்மாநிலத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இந்நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வார விடுமுறை நாட்களில் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில கல்வி அமைச்சர் நாகேஷ் இதனைத் தெரிவித்தார்.

அதேநேரத்தில், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் இரவு நேர ஊரடங்கு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நேற்று மட்டும் 47 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 29 பேர் உயிரிழந்தனர். தற்போது கர்நாடகாவில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 231 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

வாக்குச் சதவிகிதத்தில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்!

Halley Karthik

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை எப்படி செயல்படுகிறது?

“தமிழ்நாட்டின் உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்துவார்”

Gayathri Venkatesan