முக்கியச் செய்திகள் தமிழகம்

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

கொரோனா பெருந்தொற்று காரணமாக 10 , 11, மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு காரணமாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு மேலாக பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் எனவும் தெரிகிறது. இந்நிலையில், தொற்று பரவல் வேகமெடுத்து வருவதால் 10 மற்றும் 11, 12-ம் வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாணவர்களின் நலன் கருதி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. தேர்வு குறித்த அறிவிப்புகள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு பள்ளி மாணவி தற்கொலை

G SaravanaKumar

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்

Halley Karthik

சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஜி.கே.வாசன்

Niruban Chakkaaravarthi