பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை நடத்தக் கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில், தமிழ் தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதன்முறையாக தமிழை தகுதித் தேர்வாக, விரிவுரையாளர் தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் தமிழ் தகுதித் தேர்வை அமல்படுத்திய நிலையில், தற்போது ஆசிரியர் தேர்வு வாரியமும் அமல்படுத்தியுள்ளது.
விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்; அதில் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவேண்டும்; தேர்ச்சி பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
மாற்றுத்திறனாளிகள் தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.








